/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சங்கர மடத்தில் வரும் 16ல் மஹா சுவாமிகள் ஆராதனை
/
சங்கர மடத்தில் வரும் 16ல் மஹா சுவாமிகள் ஆராதனை
ADDED : டிச 14, 2025 05:35 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 68வது மடாதிபதி சங்கராச்சாரியார் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 32வது வார்ஷிக ஆராதனை மகோத்சவம், நாளை மறுதினம் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடக்கிறது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரது அனுக்கிரகத்துடன், மஹா சுவாமிகளின் ஆராதனை மகோத்சவம், மகா சுவாமிகள் பிருந்தாவனத்தின் முன் நடைபெறுகிறது.
இதில், வேதபாராயணம், வித்வத்சதஸ், உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், ஸங்கீதாஞ்சலி உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
வார்ஷிக ஆராதனை மகோத்சவம் நாளை மறுதினம் , காலை 7:00 மணிக்கு, ருத்ர பாராயணம், பூஜை, ஹோமங்கள், மதியம் 1:00 மணிக்கு மஹா சுவாமிகளின் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.
வார்ஷிக ஆராதனை மகோத்சவத்திற்கான ஏற்பாட்டை, சங்கரமடத்தின் ஸ்ரீகார்யம் விஸ்வநாத சாஸ்திரி, மேலாளர் சுந்தரேச அய்யர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

