/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி அரசு மருத்துவமனைக்கு மகாராஷ்டிரா அமைச்சர் 'விசிட்'
/
காஞ்சி அரசு மருத்துவமனைக்கு மகாராஷ்டிரா அமைச்சர் 'விசிட்'
காஞ்சி அரசு மருத்துவமனைக்கு மகாராஷ்டிரா அமைச்சர் 'விசிட்'
காஞ்சி அரசு மருத்துவமனைக்கு மகாராஷ்டிரா அமைச்சர் 'விசிட்'
ADDED : பிப் 21, 2025 01:07 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், நகர்ப்புறம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள 200 கிராமங்களில் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
தினமும் 3,000க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதோடு, 760 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக உள்ளது. இங்கு, மகாராஷ்டிரா மாநிலத்தின் பொது சுகாதாரத்துறை அமைச்சர் மேகனா போதிகர் உள்ளிட்ட சுகாதார துறை சேர்ந்த 12 பேர் கொண்ட குழுவினர் நேற்று பார்வையிட்டனர்.
அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, இருதயம் சம்பந்தப்பட்ட கேத் ஆய்வகம் உள்ளிட்ட பல பிரிவுகளில் சென்று அங்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என, கேட்டனர். மருத்துவமனையில் இணை இயக்குனர் ஹாலாரினா ஜோசிட்டா நளினி, கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், மருத்துவர் கிருஷ்ணகுமாரி உள்ளிட்டோர் சுகாதார குழுவினர் ஒவ்வொரு இடமாக காண்பித்து சிகிச்சை பற்றி விவரித்தனர்.
காஞ்சிபுரம் மருத்துவமனையின் சிகிச்சை, இடம், துாய்மை பணி போன்றவை திருப்தியாக இருந்ததாக, மகாராஷ்ட்ரா மாநில சுகாதார துறை அமைச்சர் மேகனா போதிகர் தெரிவித்தார்.