/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி வேதாந்த தேசிகருக்கு மஹோத்ஸவம் நாளை துவக்கம்
/
காஞ்சி வேதாந்த தேசிகருக்கு மஹோத்ஸவம் நாளை துவக்கம்
காஞ்சி வேதாந்த தேசிகருக்கு மஹோத்ஸவம் நாளை துவக்கம்
காஞ்சி வேதாந்த தேசிகருக்கு மஹோத்ஸவம் நாளை துவக்கம்
ADDED : அக் 01, 2024 06:56 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 756வது புரட்டாசி திருவோண நக்ஷத்திர வார்ஷீக மஹோத்ஸவம் நாளை துவங்குகிறது.
அதை தொடர்ந்து 11 நாட்கள் நடக்கும் உற்வசத்தில் தினமும், காலையில் தங்க பல்லக்கில் வெவ்வேறு அலங்காரத்திலும், மாலையில், பல்வேறு வாகனத்திலும், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் துாப்புல் வேதாந்த தேசிகர், முக்கிய வீதி வழியாக உலா வருகிறார்.
இதில், பிரபல உற்சவமான தேரோட்டம் அக்., 9ம் தேதி நடக்கிறது. அக்., 12ம் தேதி விளக்கொளி பெருமாள் மங்களாசாஸனமும், தேவாதிராஜன் பெரிய தங்க பல்லக்கில் பேரருளாளன் மங்களாசாஸனத்திற்கு அஞ்சலி திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார்.
அக்., 13ம் தேதி காலை, கந்தப்பொடி வசந்தம், தீபப்ரகாசருக்கு விமான உற்சவத்துடன், 11 நாட்கள் நடக்கும் துாப்புல் வேதாந்த தேசிகரின் வார்ஷீக மஹோத்ஸவம் நிறைவு பெறுகிறது.
உற்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் பூவழகி, தக்கார் முத்துலட்சுமி, விளக்கொளி துாப்புல் வேதாந்த தேசிகர் ச்ரவணம் ட்ரஸ்ட் கமிட்டியாளர்கள் இணைந்து செய்துள்ளனர்.