/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பராமரிப்பு இல்லாத வேளாண் சேமிப்பு கிடங்கு
/
பராமரிப்பு இல்லாத வேளாண் சேமிப்பு கிடங்கு
ADDED : மார் 27, 2025 12:47 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், இடையம்புதூர் கிராமத்தில், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்த கடன் சங்கத்திற்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர் விவசாய கடன், நகை கடன் ஆகியவை பெற வந்து செல்கின்றனர்.
இந்த கடன் சங்கத்திற்கு, 10 ஆண்டுக்கு முன், சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சேமிப்பு கிடங்கில் விவசாயிகளுக்கு தேவையான நெல், வேர்க்கடலை, எள் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டு வருகிறது.
தற்போது, சேமிப்பு கிடங்கு முன், பராமரிப்பு இல்லாததால், செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. இதனால், சேமிப்பு கிடங்கிற்கு வரும் விவசாயிகள், தங்களுடைய வாகனங்களை நிறுத்த முடியாத நிலை உள்ளது.
மேலும், இரவு நேரங்களில் அப்பகுதிகளில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே, கூட்டுறவு சங்க சேமிப்பு கிடங்கு முன், வளர்ந்துள்ள செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.