ADDED : மார் 04, 2026 06:37 AM

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள காந்தி பூங்கா, பராமரிப்பு இல்லாதால் தண்ணீரின்றி செடிகள் காய்ந்து வருவதை சீரமைக்க, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் காந்தி பூங்கா உள்ளது. பூங்கா, தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
அழகு செடி, புற்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகின்றன. இதனால், பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பூங்கா உள்ளது.
மேலும், பிளாஸ்டிக் குப்பை பூங்கா முழுதும் உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.
அதேபோல, பாம்பு, பூச்சி உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
எனவே, தினமும் ஏராளமானோர் வந்து செல்லும், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பூங்காவை சீரமைத்து, பராமரிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலி யுறுத்தி வருகின்றனர்.
