/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கட்டியாம்பந்தல் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு
/
கட்டியாம்பந்தல் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு
ADDED : அக் 28, 2025 10:29 PM
உத்திரமேரூர்: பெருங்கோழி கிராமத்தில் செல்லும், கட்டியாம்பந்தல் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று, அழுகிய நிலையில் நேற்று மீட்கப்பட்டது.
உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பெருங்கோழி கிராமத்தில், கட்டியாம்பந்தல் செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் நேற்று மாலை 5:00 மணிக்கு, அழுகிய நிலையில் அடை யாளம் தெரியாத, 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து கிடந்தது.
இதை கண்ட அவ் வழியே சென்றவர்கள், உத் திரமேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து, உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

