ADDED : ஏப் 05, 2025 10:05 PM
அ நிறம் | அளவு
குன்றத்துார்:குன்றத்துார் அருகே, சோமங்கலம் அடுத்த மலைப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவருக்கு சொந்தமான பசு, அதே பகுதியில் உள்ள வயலில் இறங்கி நெற்பயிரை மேய்ந்துள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த நிலத்தின் உரிமையாளர் ராஜன், 34, கத்தியால் பசுவின் வாலை வெட்டியுள்ளார்.
இது குறித்து, பசுவின் உரிமையாளர் சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், ராஜனை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
