/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தனியார் உணவகத்தில் தகராறில் ஈடுபட்டவர் கைது
/
தனியார் உணவகத்தில் தகராறில் ஈடுபட்டவர் கைது
ADDED : ஜூலை 30, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரகடம், ஒரகடம் அடுத்த, வாரணவாசி கிராமத்தில் தனியார் உணவகம் இயங்கி வருகிறது. இங்கு, நேற்று முன்தினம் இரவு ஆம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரவுடி அகிலன், 38. என்பவர் சிக்கன் ரைஸ் வாங்க சென்றுள்ளார்.
அப்போது, தனியார் உணவக உரிமையாளர் அன்வர், ஏற்கனவே ஆர்டர் செய்தவருக்கு சிக்கன் ரைஸ்சை கொடுத்துள்ளார். அப்போது, ரவுடி அகிலன் எனக்கு தரவில்லை என, உரிமையாளர் அன்வரை தாக்கியதாக வீடியோ காட்சி பேஸ்புக் என்னும் சமூக வளை தளத்தில் பரவியது.
இதையடுத்து, அன்வர், ஒரகடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி ரவுடி அகிலனை கைது செய்தனர்.