/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஹவுரா ரயிலில் கஞ்சா கடத்தியவர் கைது
/
ஹவுரா ரயிலில் கஞ்சா கடத்தியவர் கைது
ADDED : டிச 04, 2025 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஹவுரா ரயிலில் கஞ்சா கடத்திய திரிபுரா வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோயம்பேடு, காளியம்மன் கோவில் அருகில் பையுடன் நின்ற வாலிபரை, மதுவிலக்கு போலீசார் மடக்கி பிடித்தனர். சோதனையில், அவரிடம் 13 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது.
விசாரணையில், திரிபுரா மாநிலத்தை சேர்ந்த பாரூக் உசேன், 35, என்பதும், மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி எழும்பூர் வந்ததும் தெரிந்தது. அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், நேற்று காலை சிறையில் அடைத்தனர்.

