UPDATED : மே 10, 2026 03:37 PM
ADDED : மே 10, 2026 02:50 PM
காஞ்சிபுரம்:வெவ்வேறு இடங்களில், 16 பைக்குகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் நாகூர் மீரான். இவர், கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி அன்று, 'ஸ்பிளன்டர்' பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். இதை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார்.
திருடுபோன பைக்கை மீட்டு தரும்படி நாகூர் மீரான், சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து தனிப்படை போலீசார் தேடி வந்தனர். 'சிசிடிவி' கேமரா காட்சிகளின் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டம், பாராஞ்சி அடுத்த, ஜோதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ், 26, என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருடி சென்ற 16 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
