/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நகை கடை சுவரில் துளையிட்டு திருட முயன்றவருக்கு வலை
/
நகை கடை சுவரில் துளையிட்டு திருட முயன்றவருக்கு வலை
நகை கடை சுவரில் துளையிட்டு திருட முயன்றவருக்கு வலை
நகை கடை சுவரில் துளையிட்டு திருட முயன்றவருக்கு வலை
ADDED : அக் 29, 2025 11:12 PM
ஸ்ரீபெரும்புதுார்: சுங்குவார்சத்திரம் அருகே, நள்ளிரவில் மளிகை கடையை உடைத்து உள்ளே சென்று, அடகு கடையின் சுவரில் துளையிட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சுங்குவார்சத்திரம் அருகே, ஓ.எம்., மங்களம் பகுதியைச் சேர்ந்தவர் மங்கல்ராம், 55. இவர், அதே பகுதியில் அடகு கடை வைத்துள்ளார்.
நேற்று அதிகாலை 2:30 மணிக்கு, அடகு கடைக்கு அருகே உள்ள மளிகை கடையை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், உளி மற்றும் சுத்தியலால் நகை கடையின் சுவரை உடைத்தனர். இதனால், சத்தம் கேட்டு விழித்த அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த, கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.
இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.