ADDED : ஜூன் 17, 2025 10:01 PM
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் குபேர விநாயகர் மற்றும் பக்த ஆஞ்சநேயர் கோவில் மண்டல பூஜை பூர்த்தி விழா நடந்தது.
சின்ன காஞ்சிபரம் டாக்டர் அறிஞர் அண்ணா நகர், கணபதி தெருவில், 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த குபேர விநாயகர் -மற்றும் பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த, சின்ன காஞ்சிபுரம் டாக்டர் அறிஞர் அண்ணா நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் நகர் வாழ் பொதுமக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு முடிக்கப்பட்டு, கடந்த ஏப்., 30ம் தேதி, குபேர விநாயகருக்கும், பக்த ஆஞ்சநேயருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து தினமும் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. 48வது நாளான நேற்று, காலை 7:00 - 9:00 மணி வரை மண்டல பூஜை பூர்த்தி விழா நடந்தது. இதில், ஹோமம், கலசாபிஷேகம் உள்ளிட்டவை நடந்தது.
விழாவிற்கான ஏற்பாட்டை டாக்டர் அறிஞர் அண்ணா நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.