ADDED : ஜன 06, 2024 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:வாதாபி என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்ட முனிவர்களையும், தேவர்களையும் காக்க வேண்டி, சிவபெருமானின் ஆணைக்கிணங்க வீர உருத்ர வன்னிய மகாராஜனை தன் வேள்வியில் உதிக்கச் செய்த, ஜம்பு மகரிஷிக்கு என, சின்ன காஞ்சிபுரம் வேலாத்தம்மன் கோவில் தெருவில், புதிதாக கோவில் கட்டப்பட்டது.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார் தலைமையில், கடந்த நவ., 19ல் இக்கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
நேற்று முன்தினம், மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது.
இதில், வேலுார் சைவ சித்தாந்த பேரவை குழுவினர் பூஜைகள் மற்றும் சித்தர் அலங்கார தீப துாப ஆராதனை செய்தனர்.