/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'மேன்ஹோல்' சேதம் வாகன ஓட்டிகள் அவதி
/
'மேன்ஹோல்' சேதம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 16, 2025 02:38 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது தொடுகாடு ஊராட்சி. இப்பகுதியில் உள்ள ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் நெடுஞ்சாலை வழியே தினமும், 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, சில மாதங்களுக்கு முன் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுாரில் பேரூராட்சி சார்பில் நடந்து வந்த பாதாள சாக்கடை பணி முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேலும், திருவள்ளூர் நெடுஞ்சாலை பகுதியில் பாதாள சாக்கடை, 'மேன்ஹோல்' மூடி அடிக்கடி சேதமடைந்து மரணகுழிகளாக மாறியுள்ளது.
இப்பகுதியில் காவல்துறை சார்பில், 'பேரிகேட்' வைக்கப்பட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் பகுதிவாசிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
அவசர மருத்துவ தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வருவதில் கூட சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் பாதாள சாக்கடை பணிகளை முழுமைப்படுத்தி சேதமடைந்து வரும் பாதாள சாக்கடை மேன்ஹோல் மூடிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.