/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருப்புட்குழி அரசு பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணர்வு
/
திருப்புட்குழி அரசு பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணர்வு
திருப்புட்குழி அரசு பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணர்வு
திருப்புட்குழி அரசு பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணர்வு
ADDED : ஜூலை 25, 2025 01:25 AM

திருப்புட்குழி:திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ - மாணவியருக்கு மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட கல்வித் துறை மற்றும் விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில், திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ -- மாணவியருக்கு மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
இதில், பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தின் கவர்களால் ஏற்படும் தீமை குறித்தும், இதற்கு மாற்றாக, 'மஞ்சப்பை' பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை குறித்தும் மாணவ - மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், மாணவ - மாணவியருக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. தொடர்ந்து, எப்போது கடைக்கு சென்றாலும், பிளாஸ்டிக் பையை தவிர்த்து மஞ்சப்பையையே பயன்படுத்துவோம் என, மாணவ- - மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். விதைகள் அமைப்பு நிறுவனர் பசுமை சரண் நன்றி கூறினார்.