/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுாரில் மஞ்சப்பை விழிப்புணர்வு
/
ஸ்ரீபெரும்புதுாரில் மஞ்சப்பை விழிப்புணர்வு
ADDED : ஜூன் 26, 2025 12:56 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விதைகள் தன்னார்வ அமைப்பு, காஞ்சிபுரம் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், திரிவேணி அகாடமி மற்றும் ராமானுஜர் லயன் சங்கம் இணைந்து, ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில், மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் வசந்தி தலைமை தாங்கி, பிளாஸ்டிக் பயன்பாடுகளின் தீமைகள் குறித்தும், மஞ்சப்பையின் நன்மைகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து, மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, திரிவேணி அகாடமி பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்று, 'பிளாஸ்டிக் வேண்டாம் மஞ்சப்பை பயன்படுத்துங்கள்' என முழக்கமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், ஸ்ரீபெரும்புதுார் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், விதைகள் தன்னார்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.