ADDED : ஜூன் 16, 2026 10:25 PM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னையில் வரும் 26ம் தேதி, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடக்க உள்ளது.
சர்வதேச போதை ஒழிப்பு தினம், ஜூன் 26ம் தேதி கடைபிடிக்கப் படுகிறது.
இதை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 'ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்' என்ற தலைப்பில் 6 கி.மீ., துார விழிப்புணர்வு ஓட்டம் வரும் 26ம் தேதி காலை 6:00 மணிக்கு அண்ணா நினைவிடத்தில் நடைபெறவுள்ளது. இதில் 14 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க விரும்புவோர், https://schemes.sdat services.tn.gov.in/#/marathon/index என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. பதிவு செய்ய வரும் 22ம் தேதி கடைசி நாள்.
