/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உணவு கழிவுகளால் மாசடையும் மாத்துார் ஏரி
/
உணவு கழிவுகளால் மாசடையும் மாத்துார் ஏரி
ADDED : செப் 20, 2024 12:37 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாத்துார் ஊராட்சியில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி நீரை பயன்படுத்தி, 350 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது.
இந்த நிலையில், ஒரகடம் சிப்காடில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து, வெளியேறும் உணவு கழிவுகளை இரவு நேங்களில், வாகனங்களில் கொண்டுவந்து, இந்த ஏரியின் நீர்வரத்து கால்வாயில் கொட்டி செல்கின்றனர்.
இவை மழை பொழிவின் போது, அப்படியே ஏரியில் கலக்கிறது. இதனால், ஏரி நீர் மாசடைந்து வருகிறது.
மேலும், அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயமும் எழுந்துள்ளது. எனவே, ஏரியில் உணவு கழிவுகள் கொட்டுவதை தடுத்து, நீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.