/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 10ல் மயான கொள்ளை உற்சவம்
/
அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 10ல் மயான கொள்ளை உற்சவம்
அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 10ல் மயான கொள்ளை உற்சவம்
அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 10ல் மயான கொள்ளை உற்சவம்
ADDED : மார் 05, 2024 11:26 PM
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், திருக்கச்சிநம்பி தெருவில் பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மயானகொள்ளை உற்சவம் நடந்து வருகிறது. அதன்படி, 119வது ஆண்டு மயான கொள்ளை உற்சவம் வரும் 10ல் நடக்கிறது.
உற்சவத்தையொட்டி, நாளை இரவு காப்பு கட்டுதலும், பூங்கரக உற்சவமும் நடக்கிறது. வரும் 8ல் இரவு மஹா சிவராத்திரி பூஜை நடக்கிறது.
மயான கொள்ளை உற்சவமான வரும் 10ல், காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு மஹா அபிஷேகமும், 9:00 மணிக்கு சின்ன வேப்பங்குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டுதல் நிகழ்வும் நடக்கிறது.
மாலை 4:00 மணிக்கு அங்காளம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, சின்ன காஞ்சிபுரம் வேகவதி நதி மயானத்தில் மயான கொள்ளை நடக்கிறது. இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது.