ADDED : நவ 24, 2024 09:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:சென்னை மீனாட்சி இயன்முறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில், மாகரல் கிராமத்தில், இலவச இயன்முறை மருத்துவ முகாம் கல்லுாரி முதல்வர் பார்த்தசாரதி தலைமையில் நடந்தது.
கல்லுாரி இணை பேராசிரியர் ஹரிஹர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாகரல் ஊராட்சி தலைவர் மேதாஞானம் வரவேற்றார். முகாமில் கழுத்து, மூட்டு, தோள்பட்டை, பின் இடுப்பு ஆகிய இடங்களில் ஏற்படும் வலிகளுக்கு எளிய பயிற்சி வாயிலாக குணப்படுத்தும் முறைகளை இயன்முறை மருத்துவ கல்லூரியில் பயிலும் பயிற்சி மருத்துவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
முகாமில் 83 பேருக்கு இலவசமாக இயன்முறை மருத்துவ ஆலோசனையும், பயிற்சியும் வழங்கப்பட்டது.