ADDED : பிப் 15, 2024 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்கம், டி.சி.ஓ.ஏ., பப்ளிக் பவுண்டேஷன் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் எம்.எஸ்.டி., மருத்துவமனை சார்பில், இலவச பொது அறுவை சிகிச்சை மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை முகாம் நடந்தது.
தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச் சங்க மாநில பொருளாளர் கோவர்தனன் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். பவுண்டேஷன் நிர்வாகி பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
இதில், எம்.எஸ்.டி.,மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் வெங்கடேசன், விஷ்ணு வரதன், ஸ்ரீராம் ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
நோயின் தன்மைக்கேற்ப மருந்து, மாத்திரை வழங்கி, பிளாஸ்டிக் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை குறித்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.