ADDED : டிச 05, 2024 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்,
தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட தி.மு.க., மருத்துவர் அணி மற்றும் கற்பக விநாயகா மருத்துவமனை சார்பில், சாலவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பொது மருத்துவம் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,- சுந்தர் முகாமை துவக்கி வைத்தார். அதில், பொது மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டு, மருந்து மாத்திரை வழங்கப்பட்டது.