/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விசூரில் மருத்துவ முகாம் 300 பேருக்கு பரிசோதனை
/
விசூரில் மருத்துவ முகாம் 300 பேருக்கு பரிசோதனை
ADDED : செப் 19, 2025 10:52 PM
உத்திரமேரூர்:விசூரில் நேற்று நடந்த மருத்துவ முகாமில், 300 பேர் பங்கேற்று உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், விசூர் கிராமத்தில், அகத்தீஸ்வரர் கோவில் அருகே, த.வெ.க., மற்றும் மதுராந்தகம் கற்பக விநாயகர் மருத்துவமனை சார்பில், பொது மருத்துவ முகாம் நேற்று நடந்தது. த.வெ.க., தென்மேற்கு ஒன்றிய செயலர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் தென்னரசு பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார்.
அதில், பொதுநல மருத்துவம், எலும்பு, கண், குழந்தைகள் நல மருத்துவம், காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன் அடைந்தனர்.