நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த, பட்டாங்குளம் கிராமத்தில், மீனாட்சி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின்கீழ் இயங்கும், கிராமப்புற சுகாதார நிலையத்தில் அதன் நிறுவனர் ராதாகிருஷ்ணன் 87வது பிறந்தநாளை முன்னிட்டு, மருத்துவ முகாம் வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
அதில், கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு, பொது மருத்துவம் ஆகிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. முகாமில் பங்கேற்ற 200 பேருக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
அதை தொடர்ந்து, முகாமில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.