/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மருத்துவ கல்லுாரி மாணவர் தற்கொலை
/
மருத்துவ கல்லுாரி மாணவர் தற்கொலை
ADDED : அக் 29, 2025 10:16 PM
காஞ்சிபுரம்:  நாகை, அரசு மருத்துவ கல்லுாரி மாணவர் தற்கொலை செய்து கொண் டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், கோட்டூரைச் சேர்ந்த வேல்முருகன் மகன் நிஷாந்த், 22, நாகை, அரசு மருத்துவ கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார். கல்லுாரி வளாகத்தில், விடுதியில் தங்கியிருந்தார். 2ம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், நிஷாந்த் மன வேதனையில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு படிப்பதற்காக தனி அறைக்கு சென்றவர், நேற்று காலை அறையை விட்டு வெளியே வரவில்லை. சக மாணவர்கள் சந்தேகமடைந்து, அறையின் கதவை உடைத்து பார்த்தனர்.
அப்போது, அறை மின் விசிறியில் கயிறால் துாக்குப்போட்டு நிஷாந்த் இறந்த நிலையில் தொங்கினார்.
புகாரில், வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்து, மாணவர் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் மருத்துவக்கல்லுாரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

