/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
276 தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை
/
276 தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை
ADDED : செப் 25, 2024 07:10 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்தில், 61 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகள் தோறும், பொது இடங்களை தூய்மைப்படுத்துதல், வீடுகளில் குப்பை பெற்று மட்கும் குப்பை, மட்காத குப்பை என, தரம் பிரித்தல் உள்ளிட்ட பணிகளை தூய்மை மற்றும் துப்புரவு பணியாளர்கள் மேற்கொள்கின்றனர்.
இப்பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
வாலாஜாபாத் அரசு மருத்துவமனை மற்றும் அய்யம்பேட்டை, தென்னேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பங்கேற்று துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். 276 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 12 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் முகாமினை துவக்கி வைத்தார். வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் மற்றும் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், காஞ்சனா உட்பட பலர் பங்கேற்றனர்.