/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை
/
நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை
நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை
நடைபயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை
ADDED : அக் 05, 2025 09:40 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், ' நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தின்கீழ், நேற்று நடந்த 8 கி.மீ., நடைபயிற்சி இயக்கத்தில் பங்கேற்ற 125 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, 2023 நவம்பர் மாதம் முதல், மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ' நடப்போம் நலம் பெறுவோம்' என்ற 8 கி.மீ., நடைபயிற்சி இயக்கத்தை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது.
அதன்படி அக்., மாதத்திற்கான, 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தின்கீழ் நடைபயிற்சி இயக்கம் காஞ்சி கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் நேற்று துவங்கியது.
இந்திய மருத்துவ சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். இந்திய மருத்துவ சங்க செயலர் முத்துகுமரன் முன்னிலை வகித்தார்.
இதில், தொற்றாநோய் தடுப்பு திட்ட மருத்துவ அலுவலர் மணிகண்டன், மாவட்ட மலேரியா அலுவலர் மணிவர்மா, மருத்துவம் சாரா மேற்பார்வையாளர்கள், மாநகராட்சி தற்காலிக பணியாளர்கள், தன்னார்வலர்கள் என, 125 பேர் பங்கேற்றனர்.
பரந்துார் வட்டார சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையிலான குழுவினர் நடைபயிற்சி மேற்கொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில், மாநகராட்சி சுகாதார அலுவலர் அருள்நம்பி ஆகியோர் தலைமை யிலான குழுவினர் செய்திருந்தனர்.