/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி மாணவியருக்கு மனநலம் குறித்த ஆலோசனை
/
பள்ளி மாணவியருக்கு மனநலம் குறித்த ஆலோசனை
ADDED : செப் 28, 2025 12:42 AM
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த ஆலோசனை வழங்கப்பட்டது.
சின்ன காஞ்சிபுரம் பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம், சதாவரத்தில் உள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் துவங்கியது.
தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் கோமதி தலைமை வகித்தார்.
மாநகராட்சி தி.மு.க., -- கவுன்சிலர் சர்மிளா, பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பால்ஆரோக்கியதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், களப்பணியாக பள்ளி வளாகம் துாய்மைபடுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
இரண்டாம் நாளான நேற்று, சின்ன காஞ்சிபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார செவிலியர்கள் அருளரசி, விஜயா ஆகியோர், பள்ளி மாணவியருக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த ஆலோசனை வழங்கினர்.
மாவட்ட தொடர்பு அலுவலர் ரமேஷ், போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சுபாலட்சுமி வரவேற்றார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சங்கீதா நன்றி கூறினார்.