/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.1க்கு மெட்ரோ, பஸ், ரயில் பயணம்
/
ரூ.1க்கு மெட்ரோ, பஸ், ரயில் பயணம்
ADDED : நவ 11, 2025 11:26 PM
சென்னை: 'சென்னை ஒன்' செயலி யில், தலா ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி மெட்ரோ, மாநகர பேருந்து மற்றும் மின்சார ரயிலில் ஒரு முறை சலுகை பயணம், ஓரிரு நாளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சென்னை புறநகரில், மின்சார ரயில், மெட்ரோ, மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்சிகளில் பயணிக்க வசதியாக 'சென்னை ஒன்' செயலி, கடந்த செப்., 22ம் தேதி, தமிழக அரசு துவங்கியது.
இதுவரையில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பயன் படுத்தி வருகின்றனர்.
இதில் கடந்த 10ம் தேதி மட்டும், இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக, 29,704 டிக்கெட்டுகள் விற்று சாதனை புரிந்துள்ளது.
இந்நிலையில், இந்த செயலியை ஊக்குவிக்கும் வகையில் புதிய சலுகை, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதன்படி, பி.எச். ஐ.எம்., எனப்படும் பீம் மற்றும் நேவி செயலியை பயன்படுத்தி, யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்துவோர், சென்னை மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளின் டிக்கெட்டை, ஒரு ரூபாய் மட்டுமே செலுத்தி, முதல் முறை மட்டும் பயணம் செய்ய முடியும்.

