/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேட்டுப்பாளையம் சாலையோரம் பாதுகாப்பு தடுப்பு அமைப்பு
/
மேட்டுப்பாளையம் சாலையோரம் பாதுகாப்பு தடுப்பு அமைப்பு
மேட்டுப்பாளையம் சாலையோரம் பாதுகாப்பு தடுப்பு அமைப்பு
மேட்டுப்பாளையம் சாலையோரம் பாதுகாப்பு தடுப்பு அமைப்பு
ADDED : ஜூன் 18, 2025 01:29 AM

ஸ்ரீபெரும்புதுார்:மேட்டுப்பாளையம் சாலையின் இருபுறங்களிலும் பாதுகாப்பு தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஒரகடம் அடுத்த, பண்ருட்டியில் இருந்து, மேட்டுப்பாளையம் வழியாக செல்லும் சாலையில், ஏராளமான வாகனங்கள் சென்று வகின்றன. குண்ணம், மேட்டுப்பாளையம், வல்லம் கண்டிகை உள்ளிட்ட கிராம மக்கள் இந்த சாலை வழியே, ஒரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல, வல்லக்கோட்டையில் உள்ள மகளிர் தங்கும் விடுதிக்கு செல்லும் ஏராளமான தனியார் பேருந்து செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில், மேட்டுப்பாளையத்தில் உள்ள வளைவில் தடுப்பு இல்லாமல் உள்ளது.
இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், வளைவில் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதையடுத்து, ஆபத்தான வளைவாக உள்ள அப்பகுதியில், சாலையோரம் பாதுாகாப்பு தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, வல்லம் -வடகால் சிப்காட் சார்பில், சாலையின் இருப்புறங்களிலும் பாதுகாப்பு தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.