/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பால் கொள்முதல் நிலையம் களியனுாரில் திறப்பு
/
பால் கொள்முதல் நிலையம் களியனுாரில் திறப்பு
ADDED : பிப் 04, 2024 06:10 AM
வாலாஜாபாத் : வாலாஜாபாத் ஒன்றியம், களியனுாரில் கால்நடை வளர்ப்போர் அதிக அளவில் உள்ளனர். இப்பகுதியில், கறவை மாடுகள் பராமரிப்போர் தனியாரிடம் பால் விற்பனை செய்து வருகின்றனர்.
பாலுக்கான முழுமையான விலை தனியாரிடம் கிடைக்காததால், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்த இப்பகுதி கால்நடை விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதற்காக, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 15 லட்சம் ரூபாய் செலவில் களியனுார் ஊராட்சியில் பால் கொள்முதல் நிலைய கட்டடம் கட்டப்பட்டு வந்தது.
இப்பணி நிறைவு பெற்றதையடுத்து, நேற்று, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி, செல்வம், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் பால் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தனர்.
வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் மற்றும் களியனுார் ஊராட்சி தலைவர் வடிவுக்கரசி உள்ளிட்டோரிர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.