UPDATED : நவ 23, 2026 08:16 PM
ADDED : நவ 23, 2026 08:16 PM

பூசிவாக்கம்: தண்டவாளங்களின் ஓரம், மண் அரிப்பை தடுக்கும் வகையில், ராட்சத இரும்பிலான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரக்கோணத்தில் இருந்து, காஞ்சிபுரம், வாலாஜாபாத் வழியாக, செங்கல்பட்டு வரையில், மின்சார ரயில் வழித்தடம் செல்கிறது. இந்த ரயில் வழிதடத்தில், சங்கராபுரம், பூசிவாக்கம், கிதிரிப்பேட்டை உள்ளிட்ட கடவுப்பாதைகளில், சுரங்கப்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.
அக்டோபர் மாதம் பெய்த மழையால், பூசிவாக்கம் சுரங்கப்பாதை அருகே தண்டவாளத்தின் கீழே இருந்த மண் சரிந்து, ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
அதே இரவு தண்டவாளம் அருகே மண் கொட்டி சரி செய்து, ரயில்கள் இயக்கப்பட்டன.
இனி வருவது மழைக்காலம் என்பதால், சுரங்கப்பாதை அருகே மண் சரிவு ஏற்படக்கூடாது என, ராட்சத இரும்பிலான தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன.
இது, தண்டவாளங்களின் ஓரம் ஏற்படும் மண் அரிப்பை முற்றிலும் தடுக்கும் என, ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும், சுரங்கப்பாலத்தில் தேங்கும் மழைநீரை அகற்ற இயந்திரங்கள் மூலமாக வெளியேற்ற மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
