/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மினி பஸ் வழித்தடங்கள்: பொதுமக்கள் கருத்து சொல்லலாம்
/
மினி பஸ் வழித்தடங்கள்: பொதுமக்கள் கருத்து சொல்லலாம்
மினி பஸ் வழித்தடங்கள்: பொதுமக்கள் கருத்து சொல்லலாம்
மினி பஸ் வழித்தடங்கள்: பொதுமக்கள் கருத்து சொல்லலாம்
ADDED : பிப் 15, 2025 09:38 PM
காஞ்சிபுரம்:மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் 2024ன் படி, பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு, போதுமான சாலை போக்குவரத்து சேவையை அரசு வழங்க உள்ளது.
இதற்காக, 100 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களின் மக்கள் தொகை கொண்ட கிராமங்கள், அருகில் உள்ள பேருந்து நிலையத்தையோ அல்லது நகரத்தை அடைவதற்கு தேவையான பேருந்து சேவை வழங்குவதை உறுதி செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்காக, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் மினி பேருந்தின் கட்டண திருத்தம் வாகனச் சட்டத்தில், இந்த புதிய விரிவான திட்டம் 2024 உடனடியாக அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் மினி பேருந்துக்கான கட்டண திருத்தம் இந்தாண்டு மே மாதம் 1 ம் தேதி நடைமுறைக்கு வருகிறது.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
*மினி பேருந்து அதிகபட்ச துாரம் 25 கிலோ மீட்டருக்கு மிகையாக இருக்கக் கூடாது.
*பேருந்து சேவையின் தொடக்கம் என்பது சேவை செய்யப்படாத குடியிருப்பு அல்லது கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்.
*பேருந்து சேவையின் தொடக்கம் பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்.
*தொடக்க புள்ளியிலிருந்து அடுத்த ஒரு கிலோமீட்டர் துாரத்தில் அரசு மருத்துவமனை மேல்நிலைப்பள்ளி, கல்லுாரி, ரயில் நிலையம், உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை சந்தை, கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், புகழ்பெற்ற வழிப்பாட்டுத் தலங்கள் அல்லது பேருந்து நிலையம் போன்ற இடங்களுக்கு பேருந்து சேவை ஒரு கி.மீ.,துாரம் கூடுதல் துாரம் அனுமதிக்கலாம்.
*பழைய மினி பேருந்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்கள், இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு விருப்பத்தை எழுத்துப்பூர்வமாக அளித்து அனுமதி சீட்டினை ஒப்படைக்க வேண்டும்.
*மினி பேருந்து இருக்கைகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருக்கைகள் தவிர்த்து அதிகபட்சமாக, 25 ஆக இருக்க வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த மினி பேருந்து புதிய விரிவான திட்டம் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விவரங்களை இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள், பேருந்து மற்றும் மினி பேருந்து உரிமையாளர்கள், அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலரிடம், மார்ச் 31 க்குள் சமர்ப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

