/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உற்பத்தி துறை ஊழியர்களில் பெண்கள் 43 சதவீதம் அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
/
உற்பத்தி துறை ஊழியர்களில் பெண்கள் 43 சதவீதம் அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
உற்பத்தி துறை ஊழியர்களில் பெண்கள் 43 சதவீதம் அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
உற்பத்தி துறை ஊழியர்களில் பெண்கள் 43 சதவீதம் அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
ADDED : நவ 21, 2024 11:37 PM

காஞ்சிபுரம், :ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், விழிப்புணர்வு கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் நேற்று பங்கேற்றார்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இயங்கும் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகளில் உயரமான பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் பேசினர்.
கூட்டத்தில், தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார்கள்.
கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பேசியதாவது:
தொழிலக பாதுகாப்பில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், 1,844 பயிற்சி வகுப்புகள் வாயிலாக, 98,245 தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளது. மத்திய அரசின் புள்ளியியல் துறை கணக்கீட்டின்படி 2022- - 23 ஆண்டில் இந்தியாவில், 18 லட்சத்து 49,492 தொழிலாளர்கள் உள்ளனர்.
அதில், தமிழகத்திற்கு ஏறக்குறைய 15 சதவீதம் தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். அதுபோல, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் உற்பத்தி துறையில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், அரசு செயலர் வீரராகவ ராவ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குனர் ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.