/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பேசியபடி பேருந்து இயக்கிய ஓட்டுநரின் மொபைல் பறிமுதல்
/
பேசியபடி பேருந்து இயக்கிய ஓட்டுநரின் மொபைல் பறிமுதல்
பேசியபடி பேருந்து இயக்கிய ஓட்டுநரின் மொபைல் பறிமுதல்
பேசியபடி பேருந்து இயக்கிய ஓட்டுநரின் மொபைல் பறிமுதல்
ADDED : டிச 25, 2024 01:57 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் போக்குவரத்து பணிமனைக்கு உட்பட்ட, தடம் எண்: டி-68 என்ற அரசு பேருந்து, உத்திரமேரூரில் இருந்து செங்கல்பட்டுக்கு, தினமும் ஐந்து நடை இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று காலை 9:13 மணிக்கு இப்பேருந்து, உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து, திருப்புலிவனம் அரசு கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது, மொபைல்போன் பேசியபடி ஓட்டுனர் தர்மன், 50, என்பவர் பேருந்தை இயக்கியதை கண்ட, காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டல துணை மேலாளர் பொன்னுபாண்டி, ஓட்டுனரிடம் இருந்த மொபைல்போனை பறிமுதல் செய்தார்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அலுவலர் கூறுகையில், 'மொபைல்போன் பேசியபடி பேருந்து இயக்கிய ஓட்டுநர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.