ADDED : ஜன 16, 2025 09:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை:ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பரிஷ்குமார் ரவுத், 24, இவர், தாம்பரம் அருகே படப்பையில் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் படப்பை பி.டி.ஓ., அலுவலகம் அருகே, மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், கத்தியை காட்டி மிரட்டி மொபைல் போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்து, மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, மொபைல் போன் பறித்தவர்களை தேடி வருகின்றனர்.