/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கும்பமேளாவில் உயிரிழந்தோருக்கு மோட்ச தீபம்
/
கும்பமேளாவில் உயிரிழந்தோருக்கு மோட்ச தீபம்
ADDED : ஜன 30, 2025 12:16 AM
காஞ்சிபுரம் : உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் என்ற ஷேத்திரத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா, கடந்த 13ல் துவங்கி பிப்., 28ம் தேதி வரை நடக்கிறது. இதில், கோடிக்கணக்கான பக்தர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நீராடுவர்.
கோடிக்கணக்கான பக்தர்கள் கங்கை கரையில் குவிந்து நீராடும் போதுஏற்பட்ட கூட்ட நெரிசலில், பலர் உயிரிழந்ததாகவும், நுாற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், இதுகுறித்து மிகவும் வேதனையடைந்தார்.
சுவாமிகளின் அருளானையின்படி, உயிர்நீத்தோர் ஆத்மா சாந்தியடையவும், பாதிக்கப்பட்டோர் விரைவாக குணமடையவும், பிரார்த்தனை செய்து காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் கிழக்கு ராஜகோபுரத்தில், நேற்று மாலை 6:30 மணிக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

