/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டீக்கடையின் இரும்பு ஷீட்டை கழட்டி பணம், பொருள் கொள்ளை
/
டீக்கடையின் இரும்பு ஷீட்டை கழட்டி பணம், பொருள் கொள்ளை
டீக்கடையின் இரும்பு ஷீட்டை கழட்டி பணம், பொருள் கொள்ளை
டீக்கடையின் இரும்பு ஷீட்டை கழட்டி பணம், பொருள் கொள்ளை
ADDED : மார் 26, 2025 07:33 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, உளுந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் பரத், 24. ஒரகடம் மேம்பாலம் அருகே, ‛மூன் கபே' என்ற பெயரில் டீக்கடை வைத்து நடந்தி வருகிறார்.
நேற்று காலை பரத் வழக்கம் போல, கடை திறந்த போது, உள்ளே வைத்திருந்த 8,000 ரூபாய் மதிப்புள்ள சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், கல்லாவில் இருந்த 2,000 ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது.
பின்னர் கடையை சோதனை செய்து பார்தபோது, கடையின் பின்புறம் உள்ள இரும்பு ஷீட்டின் ஸ்குருவை கழட்டி, அதன் வழியே உள்ள வந்த கொள்ளயைர்கள் பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரிந்தது. இது குறித்த தகவின் படி, ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.