/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காலி மனையில் தேங்கும் மழைநீரால் கொசு தொல்லை
/
காலி மனையில் தேங்கும் மழைநீரால் கொசு தொல்லை
ADDED : டிச 24, 2025 06:51 AM

புஞ்சையரசந்தாங்கல்: கா லி மனையில் தேங்கும் மழைநீரால், கொசுத்தொல்லை அதிகரித்து வருவதால், மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டுமென, புஞ்சையரசந்தாங்கல் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், புஞ்சையரசந்தாங்கல் பிரதான சாலையை சுற்றியுள்ள பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், காஞ்சிபுரத்தில் கடந்த வாரம் பெய்த மழையால், காலி மனையில் குட்டைபோல மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால், கொசுத்தொல்லை அதிகரித்து அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
மேலும், மழைநீரில் உலாவும் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், வீட்டிற்குள் புகுந்து விடுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
எனவே, புஞ்சையரசந்தாங்கல் கிராம காலி மனையில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்துவதோடு, மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

