
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில், சிறப்பு அன்னையர் தினம் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.
மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் தாய்மார்களை சிறப்பிக்கும் வகையில் இந்த சிறப்பு அன்னையர் தினம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகளின் அன்னையர்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
அப்போது, கலெக்டர் கலைச்செல்வி பேசியதாவது :
சிறப்பு குழந்தைகளின் தேவைகளைப் பராமரிக்க அன்னையர்கள் தங்களின் தனிப்பட்ட கனவுகளை விட்டு தங்கள் சிறப்பு குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் பொறுமையுடன் துன்பங்களை எதிர்கொள்கிறீர்கள்.
இருப்பினும், குழந்தைகளின் தனித்துவமான திறமைகள் மற்றும் திறன்களை மேம்படுத்திய அன்னையர்களுக்கு வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.