/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் ஜல்லி கற்கள் சிதறல் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
சாலையில் ஜல்லி கற்கள் சிதறல் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
சாலையில் ஜல்லி கற்கள் சிதறல் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
சாலையில் ஜல்லி கற்கள் சிதறல் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 21, 2024 11:04 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, அருங்குன்றம், பட்டா, திருமுக்கூடல், பழவேரி ஆகிய பகுதிகளில் கல் குவாரிகள், கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து, ஜல்லிகள், எம்.சாண்ட் ஆகியவை செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு,லாரிகளில் எடுத்து செல்லப்படுகின்றன.
அப்போது, ஜல்லி கற்கள் மீது தார்ப்பாய் மூடாமல் லாரிகள் செல்வதால் சாலைகளில் சிதறுகின்றன. மேலும், எம்.சாண்ட் ஏற்றி செல்லும் லாரிகளில் இருந்தும், தூசி பறந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
இந்நிலையில், சாலவாக்கம்- - திருமுக்கூடல் சாலையில் உள்ள கிடங்கரை பகுதியில், ஜல்லி கற்கள் சிதறி கிடக்கின்றன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, ஜல்லி கற்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள், தார்ப்பாயால் மூடி செல்ல நடவடிக்கை,எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.