/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வர்ணம் பூசாத வேகத்தடையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
வர்ணம் பூசாத வேகத்தடையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வர்ணம் பூசாத வேகத்தடையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வர்ணம் பூசாத வேகத்தடையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 06, 2025 02:02 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைபாக்கம் உள்ளிட்ட சிப்காட் தொழில்பூங்காகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஊழியர்கள் பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், பிள்ளைபாக்கம சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையின் மீது வெள்ளை நிற வர்ணம் பூசாமலும், ஒளி பிரதிபலிப்பான் அமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள், வேகத்தடை இருப்பது தெரியாமல், அதில் ஏறி இறங்கி நிலைத் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
எனவே, வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் பூசி, ஒளி பிரதிபலிப்பான் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.