/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பரந்துார் - சிறுவாக்கம் சாலை மோசம் தினமும் '8' போடும் வாகன ஓட்டிகள்

ADDED : ஜன 24, 2025 01:18 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை கூட்டுச்சாலை அருகே, பரந்துார் செல்லும் சிறுவாக்கம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து, சிறுவாக்கம், சிறுவாக்கம் மோட்டூர், வரதாபுரம், காரை ஆகிய கிராமங்களுக்கு செல்லும், பிரதான கூட்டுச்சாலை உள்ளது.
இச்சாலை வழியாக செல்லும் பயணியர் மற்றும் வாகன ஓட்டிகள், சிறுவாக்கம் ஸ்கந்தாலையா ஆசிரமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு சென்று வருகின்றனர். இதில், பொன்னேரிக்கரை - பரந்துார் சாலையில் இருந்து, சிறுவாக்கம் கூட்டுச்சாலை வரை, சாலை சேதமடைந்து, மரண பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும், இந்த சாலை வழித்தடத்தில் போதியளவில் மின்விளக்கு வசதிகள் இல்லை. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே, பரந்துார் சாலை முதல் சிறுவாக்கம் சாலை வரை ஏற்பட்டுள்ள மரண பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.