/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை ஓரம் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலை ஓரம் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 30, 2024 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செவிலிமேடு : காஞ்சிபுரம் மாநகராட்சி, 42வது வெங்கடாபுரம் வழியாக, விப்பேடு ஊராட்சிக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.
இந்த சாலையில் வயல்வெளி பள்ளம் உள்ள பகுதியில் சாலை தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.
அப்பகுதியில், மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் போது, பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, வெங்கடாபுரம் சாலையோரம் விபத்து ஏற்படுத்தி வரும் பள்ளத்தை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.