/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சீமை கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் அவதி
/
சீமை கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மார் 24, 2025 12:52 AM

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சிக்குட்பட்டு ஆரம்பாக்கம் கிராமம் உள்ளது. வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், படப்பை அடுத்து, ஆரம்பாக்கம் சந்திப்பில் இருந்து பிரிந்து, அம்மணம்பாக்கம், ஒரத்துார், காவனுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையின் இறுப்புறமும், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து, சாலையில் படர்ந்துள்ளன. இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, முட் செடிகள் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன.
மேலும், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகளால் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள், போக்குவரத்திற்கு இடையூராக சாலையில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.