/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பரந்துார் சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
பரந்துார் சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
பரந்துார் சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
பரந்துார் சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 05, 2024 11:45 PM

பரந்துார், காஞ்சிபுரம் அடுத்த, மேட்டுப்பரந்துார் கிராமத்தில் இருந்து, நாகப்பட்டு துணை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம், 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. சாலையின் மற்றொரு பகுதியில், வயல்வெளியையொட்டி மிகப்பெரிய பள்ளம் உள்ளது.
இதனால், மேட்டுப்பரந்துார் கிராமத்தில் இருந்து, நாகப்பட்டு கிராமத்திற்கு செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோர பள்ளத்தில் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரம் ஆபத்தாக இருக்கும் பள்ளத்திற்கு, தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
மேட்டுப்பரந்துார் - -நாகப்பட்டு இடையே சாலையோரம் பள்ளம் உள்ளது. விளக்கு வெளிச்சம் இருக்கும் வாகனங்கள், சாலையோர பள்ளத்தை கடந்து சென்று விடலாம். சைக்கிளில் செல்வோர் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது. பள்ளத்தை சுற்றி தடுப்பு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.