/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சீரமைப்பு பணியால் சேதமான சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சீரமைப்பு பணியால் சேதமான சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சீரமைப்பு பணியால் சேதமான சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சீரமைப்பு பணியால் சேதமான சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 22, 2025 01:06 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வெள்ளகுளம் தெருவில், கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை சீரமைப்பு பணியால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக் குகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 10வது வார்டு வெள்ளகுளம் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள் ளன. இ ப்பகுதியில், குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக, சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்ட பகுதி சீரமைக்கப்படாமல் உள்ளது.
இந்நி லையில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, கடந்த வாரம் சாலையில், 'மேன்ஹோல்' அமைந்துள்ள மையப்பகுதியில், பள்ளம் தோண்டுவதற்காக கான்கிரீட் சாலை உடைக்கப்பட்டது.
ஆனால், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் பணியை, மாநகராட்சி நிர்வாகத்தி னர் கிடப்பில் போட்டுள்ளனர்.
ஏற்கனவே, இச்சாலையி ல், குடிநீர் பணியால் பாதி சாலை சேதமடைந்துள்ள நிலையில், தற்போது மீதியுள்ள கான்கிரீட் சாலையும், பாதாள சாக்கடை ப ணிக்காக உடைக்கப்பட்டு உள்ளதால், இச்சாலையில் பாதசாரிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறிவிழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை பணியை விரைந்து முடித்து, உடைக்கப்பட்ட கான்கீரிட் சாலையை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெள்ளகுளம் மக்கள் வலியுறுத்தி வருகி ன்றனர்.

