/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை
சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை
சாலையில் சிதறிய ஜல்லிக்கற்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : ஆக 04, 2025 11:37 PM

ஸ்ரீபெரும்புதுார்,ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடைவதால், சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் ஒரகடம், வல்லம், வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட 'சிப்காட்' தொழிற்பூங்காக்கள் உள்ளன.
இவற்றில் உள்ள நுாற்றுக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு, பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதிக்காக, தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
தவிர, இந்த சாலையில், புதிதாக தொழிற்சாலை மற்றும் வீடு கட்டுமான பணிக்காக, ஜல்லிக்கற் களை ஏற்றிக்கொண்டு தினமும் ஏராளமான லாரிகளும் சென்று வருகின்றன.
அளவுக்கு அதிகமாக ஜல்லிக்கற்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், தார்ப்பாய் மூடாமல் பயணிக்கின்றன.
இதனால் , லாரியில் இருந்து ஜல்லிக்கற்கள் சரிந்து, சாலை முழுதும் சிதறி விழுகின்றன. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், ஜல்லிக்கற்களால் சறுக்கி விழுந்து காயமடைகின்றனர்.
எனவே, தார்ப்பாய் மூடாமல் ஜல்லிக்கற்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு, போலீசார் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிக்கற்களை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக் கை விடுத்துள்ளனர்.