சாலை அமைக்கும் பணி கிடப்பில் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்
சாலை அமைக்கும் பணி கிடப்பில் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்
ADDED : மார் 14, 2026 06:11 AM

அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியை விரைந்து முடிக்க காஞ்சி புதுநகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த, கரை - பரந்துார் சாலையில் இருந்து, ஆண்டி சிறுவள்ளூர், புதுநகர் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலையை புனரமைக்கும் பணி சமீபத்தில் துவங்கியது. இதற்காக ஏற்கனவே போடப்பட்ட தார் சாலை பெயர்த்தெடுக்கப்பட்டது. அதன் பின் பொக்லைன் இயந்திரம் வாயிலாக சாலையை சமப்படுத்தும் பணி நடந்தது.
ஆனால், பணிகள் துவங்கி இரு மாதங்களாகியும், சாலை போடும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஜல்லிகள் பெயர்ந்து கிடக்கும் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது.
எனவே, சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
