/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை தடுப்பு சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்
/
சாலை தடுப்பு சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜூன் 26, 2025 11:38 PM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் தும்பவனம் கால்வாய் ஓரம் சேதமான சாலை தடுப்பை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, அய்யப்பா நகரில் இருந்து, திருப்பருத்திகுன்றம் செல்லும் சாலையோரம், மழைநீர் செல்லும் தும்பவனம் கால்வாய் உள்ளது.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், இக்கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்குவவதை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில், கால்வாய் ஓரம் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன், இவ்வழியாக சென்ற கனரக வாகனம் மோதியதில், இரும்பு சாலை தடுப்பின் ஒரு பகுதி சேதமடைந்து விழுந்தது.
கால்வாய் ஓரம் தடுப்பு இல்லாததால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பிற வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, சேதமான இரும்பு தடுப்பை அகற்றிவிட்டு, புதிய தடுப்பு அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது.